6 சவரன் நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

Added : செப் 11, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்-வீடு புகுந்து 6 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.முதலியார்பேட்டை, வைத்திலிங்க செட்டி தெருவை சேர்ந்தவர் அன்பரசு, 55. இவர் திருவாரூரில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் நேற்று முன்தினம் சென்றார். இவரது தாய் பேபி சரோஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் கையில் அணிந்திருந்த 6 சவரன் வளையல்களை கழட்டி,

அரியாங்குப்பம்-வீடு புகுந்து 6 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.முதலியார்பேட்டை, வைத்திலிங்க செட்டி தெருவை சேர்ந்தவர் அன்பரசு, 55. இவர் திருவாரூரில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் நேற்று முன்தினம் சென்றார். இவரது தாய் பேபி சரோஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் கையில் அணிந்திருந்த 6 சவரன் வளையல்களை கழட்டி, மேஜையில் வைத்து விட்டு வெளியே சென்றார்.சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வளையல்களை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, வளையல்களை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X