இந்தியா

கடும் போட்டி: என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே...ராஜ்யசபா எம்.பி., பதவி யாருக்கு?

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-காலியாக உள்ள ராஜ்ய சபா எம்.பி., பதவியை கைப்பற்றிட ஆளும் கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் காய் நகர்த்தி வருவதால், புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ராஜ்யசபா எம்.பி., கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைகிறது.இப்பதவிக்கான தேர்தலை, இந்திய தலைமை தேர்தல்
 கடும் போட்டி: என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே...ராஜ்யசபா எம்.பி., பதவி யாருக்கு?

புதுச்சேரி,-காலியாக உள்ள ராஜ்ய சபா எம்.பி., பதவியை கைப்பற்றிட ஆளும் கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் காய் நகர்த்தி வருவதால், புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ராஜ்யசபா எம்.பி., கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைகிறது.இப்பதவிக்கான தேர்தலை, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. மனு தாக்கல் வரும் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. போட்டி இருப்பின் அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதுச்சேரியில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்., கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., விற்கு 6 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ., க்கள் 6 பேரில், மூன்று பேர் நேரடியாக பா.ஜ., விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நியமன எம்.எல்.ஏ., க்கள் மூவர் பா.ஜ., வில் உள்ளனர். இதனால், பா.ஜ.,வின் பலம் 12 ஆக உள்ளது. ஆனால், நியமன எம்.எல்.ஏ., க்களுக்கு ஓட்டுரிமை உண்டா என்பதில் தற்போது சட்ட சிக்கல் எழுந்துள்ளது.எப்படி இருப்பினும், ராஜ்ய சபா தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதி. இருப்பினும், வேட்பாளரை யார் நிறுத்தவது என்பதில் என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பா.ஜ., டில்லி ராஜ்யசபாவில் குரல் எழுப்பிட கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விடக்கூடாது என கருதுகின்றனர்.இதுதொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் சமீபத்தில் புதுச்சேரிக்கு வருகை தந்த பா.ஜ., மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானாவிடம், ராஜ்ய சபா எம்.பி., பதவியை பா.ஜ.,விற்கு பெற்றிட வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும், பா.ஜ., மாநில தலைவரான சாமிநாதன், டில்லி சென்று கட்சியின் தேசிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணி ஒப்பந்தத்தின்படி துணை முதல்வர் பதவி பா.ஜ.,விற்கு வழங்கவில்லை.இலாகா ஒதுக்கீடும் நாம் கோரியதை வழங்கவில்லை. ஆதலால், இம்முறை ராஜ்ய சபா எம்.பி., பதவியை பெற்றால் மட்டுமே, புதுச்சேரியில் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என வலியுறுத்தி உள்ளார்.அதேநேரத்தில், என்.ஆர்.காங்., கட்சியினரோ, தங்கள் கட்சி ராஜ்யசபாவில் பங்கேற்கும் வாய்ப்பை இந்த முறையேனும் பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என கட்சி தலைமையை நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.அதனையொட்டி, கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முக்கியஸ்தர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திட கட்சி தலைமை முயற்சித்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் தற்போதைய சூழல் உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணத்தினால், ராஜ்ய சபா எம்.பி., பதவியை விட்டு கொடுக்க நேரிட்டாலும், பழைய (2015ல் தனது தீவிர ஆதரவாளரான கோகுலகிருஷ்ணனை, கூட்டணி கட்சியான அ.தி.மு.க., சார்பில் நிறுத்தி எம்.பி.யாக ஆக்கியது)

பார்முலா படி, தனது கட்சியை சேர்ந்தவரை பா.ஜ., சார்பில் நிறுத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இரு கட்சிகளில் நடைபெற்று வரும் ரகசிய பேச்சுவார்த்தை மற்றும் காய் நகர்த்தல்களால், ஆளும் கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ.,வினர் சுறுசுறுப்படைந்துள்ளதால் அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X