பொது செய்தி

இந்தியா

சுகாதார ஆய்வாளர் மாற்றத்தில் முறைகேடு?

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 11 பேர், கடந்த 6ம் தேதி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது, பணியிட மாற்றல் கொள்கைக்கு எதிராக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கிராமப்புறத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் நபர், நகரப் பகுதிக்கும், நகரப் பகுதியில் அதிக நாட்கள் பணியாற்றியவர்கள் கிராமப் பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.ஆனால்,

புதுச்சேரி-புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 11 பேர், கடந்த 6ம் தேதி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது, பணியிட மாற்றல் கொள்கைக்கு எதிராக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கிராமப்புறத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் நபர், நகரப் பகுதிக்கும், நகரப் பகுதியில் அதிக நாட்கள் பணியாற்றியவர்கள் கிராமப் பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.ஆனால், சுகாதாரத்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நகரப்பகுதியில் பணியாற்றும் நபர்கள் அரசியல் சிபாரிசால் இடமாற்றம் செய்யப்படவில்லை. மாறாக நகரப்பகுதியில் சில ஆண்டு பணியாற்றிய ஊழியர்களை திட்டமிட்டு இடமாற்றம் செய்துள்ளனர். காலாப்பட்டு, ஒதியஞ்சாலை, வில்லியனுார் சுகாதார நிலையத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களுக்கு இதுவரை எவ்வித பணிமாறுதலும் வழங்கப்படவில்லை.காரைக்காலில் இருந்து நெட்டப்பாக்கத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட நபர், 2 மாதத்தில் முத்தியால்பேட்டைக்கும், அடுத்த சில நாட்களில் வில்லியனுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு 10 நாட்கள் பணியாற்றிய அவர், ஒதியஞ்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் பலத்தால் 6 மாதத்தில் மட்டும் அவருக்கு தகுந்தார்போல் 4 இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஏனாமிற்கும், காரைக்காலுக்கும் மாற்றப்பட்ட சிலர் சங்கம் பெயரை கூறியும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும் அங்கு செல்லாமல், புதுச்சேரியிலேயே சம்பளம் பெற்று வருகின்றனர். பல ஆண்டுகளாக நகரப்பகுதியில் பணியாற்றும் நபர்களை கிராமப்பகுதிக்கும், காரைக்கால், ஏனாம், மாகியில் முழுமையாக பணியை முடிக்காமல், அரசியல் செல்வாக்கால் புதுச்சேரிக்கு வந்தவர்களை கண்டறிந்து மீண்டும் அதே இடத்தில் நியமிக்க வேண்டும்.பணியிட மாற்றத்தில் நடந்த முறைகேடு, ஊழலை விசாரித்து நியாயமான முறையில் பணியிட மாறுதலை உயரதிகாரிகள் வழங்க வேண்டும் என, சுகாதார ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X