பொது செய்தி

இந்தியா

பாப்ஸ்கோ அலுவலகம் மீண்டும் திறப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி-நீண்ட நாட்களாக மூடியிருந்த பாப்ஸ்கோ அலுவலகம் மீண்டும் பூஜையுடன் திறக்கப்பட்டது.புதுச்சேரி பாப்ஸ்கோ அலுவலகத்தில் 250 நிரந்தர ஊழியர்கள் உள்பட 750 பேர் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு 46 மாதமாக சம்பளம் போடவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பாப்ஸ்கோ அலுவலகம் மூடப்பட்டது.புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில், பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடி மீண்டும்

புதுச்சேரி-நீண்ட நாட்களாக மூடியிருந்த பாப்ஸ்கோ அலுவலகம் மீண்டும் பூஜையுடன் திறக்கப்பட்டது.புதுச்சேரி பாப்ஸ்கோ அலுவலகத்தில் 250 நிரந்தர ஊழியர்கள் உள்பட 750 பேர் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு 46 மாதமாக சம்பளம் போடவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பாப்ஸ்கோ அலுவலகம் மூடப்பட்டது.புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில், பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடி மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பட்ஜெட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியான நேற்று பாப்ஸ்கோ அலுவலகம் மீண்டும் பூஜையுடன் திறக்கப்பட்டது. அமைச்சர் சாய்சரவணன்குமார் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் உதயகுமார், பாப்ஸ்கோ மேலாண் இயக்குனர் முத்துகிருஷ்ணன், பாரதிய பாப்ஸ்கோ ஊழியர்கள் முன்னேற்ற சங்க ஆலோசகர் பசுபதி, தலைவர் ராஜூ, செயலாளர் மாரியப்பன், துணை தலைவர் செந்தில்குமார், பாரதிய மஸ்துார் சங்க புதுச்சேரி மாநில தலைவர் ஆசைதம்பி, செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.அமைச்சர் சாய்சரவணன்குமார் பேசுகையில், ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கவும், தீபாவளி சிறப்பங்காடி மீண்டும் துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X