காந்தி வீதியில் தீவிபத்து| Dinamalar

காந்தி வீதியில் தீவிபத்து

Added : செப் 11, 2021
Share
புதுச்சேரி-பிளாஸ்டிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.புதுச்சேரி, காந்தி வீதியில் மனோ ஸ்டோர் உள்ளது. இதன் மேல் மாடியில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இங்கு நேற்று மாலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பற்றி எரிந்தன.தகவல் அறிந்த

புதுச்சேரி-பிளாஸ்டிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.புதுச்சேரி, காந்தி வீதியில் மனோ ஸ்டோர் உள்ளது. இதன் மேல் மாடியில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இங்கு நேற்று மாலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பற்றி எரிந்தன.தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கருகி நாசமானது. மின் கசிவில் விபத்து நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X