மயக்கப்பொடி முகத்தில் தூவி 4 சவரன் செயினை பறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயக்கப்பொடி முகத்தில் தூவி 4 சவரன் செயினை பறிப்பு

Added : செப் 11, 2021
Share
அவலுார்பேட்டை-அவலுார்பேட்டை அருகே மயக்கப்பொடி துாவி பெண்ணிடம் 4 சவரன் செயினை பறித்துச் சென்ற மரம் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அவலுார்பேட்டை அடுத்த மானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தரவேல் மனைவி மாலா, 33; இவர் நேற்று முன்தினம் மதியம் அவரது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.அப்போது 2 வாலிபர்கள் விலாசம் கேட்பது போல் மாலதியிடம் பேச்சுக் கொடுத்தனர். பின்னர்

அவலுார்பேட்டை-அவலுார்பேட்டை அருகே மயக்கப்பொடி துாவி பெண்ணிடம் 4 சவரன் செயினை பறித்துச் சென்ற மரம் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அவலுார்பேட்டை அடுத்த மானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தரவேல் மனைவி மாலா, 33; இவர் நேற்று முன்தினம் மதியம் அவரது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.அப்போது 2 வாலிபர்கள் விலாசம் கேட்பது போல் மாலதியிடம் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் திடீரென ஏதோ பொடியை முகத்தில் துாவியதில் மாலதி மயக்கமடைந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து பார்த்தபோது கழுத்தில் அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின் திருடு போனது தெரியவந்தது.புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X