சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம், திண்டிவனத்தில் விநாயகர் சிலைகள் பறிமுதல்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் இந்து முன்னணி சார்பில் இரு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறி திண்டிவனம், பெலாக்குப்பம் ரோட்டில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுவின் சகோதரர் முத்தையா, 35; தனது வீட்டின்

திண்டிவனம்-திண்டிவனத்தில் இந்து முன்னணி சார்பில் இரு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. இதனை மீறி திண்டிவனம், பெலாக்குப்பம் ரோட்டில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுவின் சகோதரர் முத்தையா, 35; தனது வீட்டின் முன் 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து வழிபட்டார்.திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, சிலையை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, பூதேரி கிராமத்தில் இந்து முன்னணி நகர செயலாளர் ஜெகன் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த 3 அடி உயர விநாயகர் சிலையை தாசில்தார் செல்வம் பறிமுதல் செய்தார்.விழுப்புரம்இந்து முன்னணி சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய 2 அடி உயரமுள்ள சிலையுடன் கோட்ட தலைவர் சிவா தலைமையில் கட்சியினர் திரண்டனர்.தகவலறிந்த டி.எஸ்.பி., பழனிச்சாமி, தாசில்தார் வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது. மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த 2 அடி உயர விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின், இந்து முன்னணியினர், கண்டன கோஷம் எழுப்பியபடி அங்குள்ள திருவள்ளுவர் சிலையை விநாயகர் எனக்கூறி, மாலை அணிவித்தனர். தொடர்ந்து, சாலையோரத்தில் திடீரென 1 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு செய்தனர்.போலீசார், அந்த சிலையையும் பறிமுதல் செய்தனர். அப்போது, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X