பொது செய்தி

தமிழ்நாடு

நகைக் கடன் விரைவில் தள்ளுபடி; அமைச்சர் மஸ்தான் தகவல்

Added : செப் 11, 2021
Share
Advertisement
செஞ்சி-முதல்வர் ஸ்டாலின் மிக விரைவில் நகைக் கடன் தள்ளுபடியை அறிவிப்பார் என அமைச்சர் மஸ்தான் பேசினார்.செஞ்சி அடுத்த போத்துவாய் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 11.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயராகவன், அவைத்தலைவர்

செஞ்சி-முதல்வர் ஸ்டாலின் மிக விரைவில் நகைக் கடன் தள்ளுபடியை அறிவிப்பார் என அமைச்சர் மஸ்தான் பேசினார்.செஞ்சி அடுத்த போத்துவாய் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 11.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயராகவன், அவைத்தலைவர் பச்சையப்பன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் மஸ்தான் புதிய கட்டடத்தை திறந்து வைத்து, 700 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசுகையில், 'ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில் விவசாயிகள் வாங்கிய விவசாய நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை விரைவில் அறிவிக்க உள்ளார்' என்றார்.துணைச் செயலாளர் அன்புச்செழியன், மாவட்ட பிரதிநிதி ஜெயபாலன். இளைஞர் அணி அமைப்பாளர் கதிரவன், மாணவர் அணி அமைப்பாளர் அய்யாதுரை, ஊராட்சி நிர்வாகிகள் குழந்தைவேலு, மஞ்சுளா ராஜாமணி, இளையழகன், குமார், பாண்டியன், ரவிந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X