சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரகண்டநல்லுார் அருகே வீட்டில் திருட முயற்சி

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அரகண்டநல்லுார் அடுத்த அரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் மனைவியின் மலர், 30; கணவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். மலர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி கொண்டு தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலைக்கு

திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அரகண்டநல்லுார் அடுத்த அரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் மனைவியின் மலர், 30; கணவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். மலர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி கொண்டு தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலைக்கு சென்றார்.நேற்று காலை 6:00 மணிக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் மலருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்தது தெரியவந்தது. பீரோவில் நகை ஏதும் இல்லை.புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து திருட முயற்சி செய்த நபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X