சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து 13 சவரன் நகை திருட்டு

Added : செப் 11, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் அருகே மெக்கானிக் வீட்டின் கதவை உடைத்து 13 சவரன் நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி, 36; மோட்டார் மெக்கானிக். இவரது மனைவி ரேவதி, 29; கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக மதுராந்தகம் அடுத்த முதுகரையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.நேற்று

திண்டிவனம்-திண்டிவனம் அருகே மெக்கானிக் வீட்டின் கதவை உடைத்து 13 சவரன் நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி, 36; மோட்டார் மெக்கானிக். இவரது மனைவி ரேவதி, 29; கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக மதுராந்தகம் அடுத்த முதுகரையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.நேற்று முன்தினம், சின்னசாமி வீட்டை பூட்டிக் கொண்டு, முதுகரை கிராமத்தில் நடந்த திருமணத்திற்கு சென்றிருந்தார். நேற்று மதியம் 1:45 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.மேலும், வீட்டில் மர அலமாரியில் இருந்த 13 சவரன் நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்கள், 40 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.சம்பவ இடத்திற்குச் சென்று ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரத்தில் இருந்து கைரேகை பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X