தமிழ்நாடு

இன்று முதல்; மாவட்ட தி.மு.க., வில் விருப்ப மனு தாக்கல்...வேட்பாளர் தேர்வு செய்யும் பணி விறு...விறு

Added : செப் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., வில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, விருப்ப மனு தாக்கல் இன்று முதல் துவங்கப்பட உள்ளது.தமிழகத்தில், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை மேற்கொள்ளப்படாததால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.இந்நிலையில், விடுபட்ட
 இன்று முதல்; மாவட்ட தி.மு.க., வில் விருப்ப மனு தாக்கல்...வேட்பாளர் தேர்வு செய்யும் பணி விறு...விறு

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., வில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, விருப்ப மனு தாக்கல் இன்று முதல் துவங்கப்பட உள்ளது.

தமிழகத்தில், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை மேற்கொள்ளப்படாததால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.இந்நிலையில், விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டுமென, தமிழக தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதையொட்டி உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கின.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஒன்றியங்களுக்குட்பட்ட 412 ஊராட்சிகளில், 3,162 கிராம வார்டு உறுப்பினர்கள், 412 ஊராட்சித் தலைவர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 19 மாவட்ட கவுன்சிலர்கள் பதவியிடத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலையொட்டி மாவட்டத்தில் 1,889 ஓட்டுச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து ஊராட்சி வார்டு வாரியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்ட உதயத்திற்குப்பின், நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், உள்ளாட்சி பதவியிடங்களைக் கைப்பற்றுவதில் தி.மு.க., - அ.தி.மு.க.,விடையே கடும் போட்டி ஏற்பட்டுஉள்ளது.தேர்தலில் ஆலோசனை வழங்குவதற்காக, கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., தேர்தல் பொறுப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அ.தி.மு.க., வில் முன்னாள் அமைச்சர்கள் சம்பத், மோகன், எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர் குமரகுரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், ஊரக உள்ளாட்சி பதவியிடத்திற்கான இடஒதுக்கீடு பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் 13ம் தேதி வெளியாகும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.இதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., வில் விருப்பமனு தாக்கல் இன்று 11ம் தேதி முதல் துவங்குகிறது. ஊராட்சி தலைவர், ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், தங்களது விருப்ப மனுவை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\
அதேபோல், பா.ஜ.,வில் விருப்ப மனுதாக்கல் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில் பெறப்பட்ட மனுக்கள், மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.இன்னும் ஓரிரு வாரங்களில் அ.தி.மு.க., விலும் விருப்பமனு தாக்கல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் களம் விறுவிறுப்பாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X