பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

Added : செப் 11, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு சார்பில் இயற்கை சீற்றங்களின்போது, மக்களை மீட்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது.பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு சார்பில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, கடல் அலையில் சிக்கும் மீனவர்களை, எப்படி மீட்பது என பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு செயல்

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு சார்பில் இயற்கை சீற்றங்களின்போது, மக்களை மீட்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது.பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு சார்பில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, கடல் அலையில் சிக்கும் மீனவர்களை, எப்படி மீட்பது என பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு செயல் விளக்கம் செய்து காட்டினர். ஏரி, குளங்களில் விழுந்தவர்களை மீட்பது குறித்து தீயணைப்புத் துறையினர் செய்முறை விளக்கமளித்தனர். இயற்கை சீற்றங்களில் சிக்கியவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் விளக்கினர். தீயணைப்பு துறையினர் மூலம் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணங்களை, கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங், எஸ்.பி., சக்தி கணேசன், சப் கலெக்டர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன், டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், தாசில்தார் அன்பழகன், பி.டி.ஓ., சிவஞானசுந்தரம், இன்ஸ்பெக்டர் தேவி, டாக்டர் பிரதீப், பேராசிரியர் ரங்கசாமி. கொத்தட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, கிராம தலைவர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X