பொது செய்தி

தமிழ்நாடு

வடக்குத்து நகர் பகுதிகளில் ஆடுகளம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
நெய்வேலி-வடகுத்து நகரப்பகுதியில் இறகு பந்து ஆடுகளம் அமைக்க அரசு முன் வர வேண்டும் என சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பினார்.சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,பேசுகையில், கடலுார் மாவட்டம் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட வடக்குத்து ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் 6,000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். அந்த பகுதி

நெய்வேலி-வடகுத்து நகரப்பகுதியில் இறகு பந்து ஆடுகளம் அமைக்க அரசு முன் வர வேண்டும் என சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பினார்.சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,பேசுகையில், கடலுார் மாவட்டம் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட வடக்குத்து ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் 6,000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். அந்த பகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் ஆன் லைன் விளையாட்டு மற்றும் சோஷியல் மீடியாக்களில் மூழ்குவதை தடுக்க இறகு பந்து ஆடுகளம் அமைக்க வேண்டும் என்றார். கேள்விக்கு பதிலளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், வடக்குத்து நகரப்பகுதிகளில் ஆடுகளம் அமைக்க இடம் தேர்வு செய்து, அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அதற்கு நன்றி தெரிவித்து தொடர்ந்து சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில்;கடந்த 2009ம் ஆண்டு துணை முதல்வராக இருந்த நமது முதல்வர் எம்.எல்.ஏ., விடுதியில் திறந்து வைத்த உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து விட்டன. அமைச்சர் புதிய உபகரணங்கள் பெற்றுத்தர வேண்டும் என்பதுடன் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து ஆடுகளத்தை விரைவில் திறக்க வேண்டும் என்றார். அமைச்சர் மெய்யநாதன் பதிலளித்து பேசுகையில், முதலமைச்சரின் அனுமதி பெற்று திறந்து வைக்கப்படும். ஸ்டேடியத்தில் உள்ள இறகுப்பந்து மைதானத்தை எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி பயிற்சியாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நல்ல செய்தியை சபா நாயகர் வாயிலாக சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X