பொது செய்தி

தமிழ்நாடு

ஒற்றை சாளர தகவல் மற்றும் அறிவுசார் மையம் துவக்கம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
சிறுபாக்கம்--மங்களூர் ஒன்றியத்தில் ஒற்றை சாளர தகவல் மற்றும் அறிவுசார் மையம் துவக்கப்பட்டது.சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் தமிழரசி செல்வராஜ் தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்தாசன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை அலுவலர் விஸ்வநாதன், உதவி அலுவலர் பிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர். நீர்பாசன

சிறுபாக்கம்--மங்களூர் ஒன்றியத்தில் ஒற்றை சாளர தகவல் மற்றும் அறிவுசார் மையம் துவக்கப்பட்டது.சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் தமிழரசி செல்வராஜ் தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்தாசன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை அலுவலர் விஸ்வநாதன், உதவி அலுவலர் பிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர். நீர்பாசன வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தில், கீழ் வெள்ளாறு உபவடி நீர் மாதிரி கிராமங்களாக, ஒரங்கூர் மற்றும் மா.புடையூர் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது.ஒற்றை சாளர தகவல் மற்றும் அறிவுசார் மையம் துவங்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள், சிக்கனமாக நீரை பயன்படுத்துவது, சொட்டுநீர் பாசனம் முக்கியத்துவம், வயல்வெளியில் நிலப்போர்வை அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X