கிரைம் செய்திகள்

Added : செப் 11, 2021
Share
Advertisement
அடையாளம் தெரியாதவர் பலி கடலுார்: கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு, தமிழக அரசு பஸ் நேற்று காலை 5:30 மணிக்கு சென்றது. கலெக்டர் முகாம் அலுவலகம் அருகில் ஒரு வழிப்பாதை வழியாக சென்ற போது, எதிரில் அடையாளம் தெரியாத 40 வயது நபர் ஓட்டி வந்த சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கடலுார், புதுநகர் போலீசார்

அடையாளம் தெரியாதவர் பலி கடலுார்: கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு, தமிழக அரசு பஸ் நேற்று காலை 5:30 மணிக்கு சென்றது. கலெக்டர் முகாம் அலுவலகம் அருகில் ஒரு வழிப்பாதை வழியாக சென்ற போது, எதிரில் அடையாளம் தெரியாத 40 வயது நபர் ஓட்டி வந்த சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.லாட்டரி விற்றவர் கைது புவனகிரி: புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். புவனகிரியில் உள்ள ஓட்டல் முன் கூட்டமாக நின்றவர்கள் போலீசாரை கண்டு தப்பி ஓடினர். ஒருவரை பிடித்து விசாரித்ததில் புவனகிரி முகம்மதியர் தெரு காதர்,53; என்பதும் நண்பர்களுடன் சேர்ந்து கேரளா லாட்டரியை இணையம் மூலம் விற்க திட்டமிட்டது தெரிந்தது. அவரை கைது செய்து, ரூ.3,000 பறிமுதல் செய்ததுடன் தப்பியோடிய 9 பேரை தேடி வருகின்றனர்.மயங்கி விழுந்தவர் சாவுகுள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லவடன், 40; திருமணமாகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத அவர், நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார். கடலுார் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.எலிபேஸ்ட் சாப்பிட்டவர் பலி பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூரைச் சேர்ந்தவர் ராதாசெங்கமலம் மகன் விஷ்ணு, 19; திருச்சியில் தனியார் கல்லுாரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட், மூன்றாம் ஆண்டு படித்தார். செய்முறை தேர்வுக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் ஓட்டலில் 2 வாரங்களாக பயிற்சி எடுத்தார். கடந்த 4ம் தேதி, விஷ்ணு இறையூர் வந்தார். 5ம் தேதி அதிகாலை 6:00 மணியளவில் எலிபேஸ்ட் சாப்பிட்டதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X