முகாம்; மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசிஒரே நாளில் 1.70 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு| Dinamalar

தமிழ்நாடு

முகாம்; மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசிஒரே நாளில் 1.70 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு

Added : செப் 11, 2021
Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 1.70 லட்சம் பேருக்கு நாளை ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கொரோனா 3ம் அலை தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகத்திலுள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக மாபெரும் தடுப்பூசி முகாம்
 முகாம்; மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசிஒரே நாளில் 1.70 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 1.70 லட்சம் பேருக்கு நாளை ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 3ம் அலை தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகத்திலுள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை நடைபெறவுள்ளது. கடலுார் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 1.70 லட்சம் பேருக்கு நாளை ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்த விரிவான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக நாளை 12ம் தேதி காலை 7.00 மணி முதல் மாலை 7.00 வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி கல்லுாரி வளாகங்கள், அரசு கல்லுாரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 909 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.இம்முகாமில் மருத்துவத் துறையின ரோடு, வருவாய்த்துறை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கல்வித்துறை, சத்துணவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் நாளை நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் செலுத்திக் கொள்லாம். கர்ப்பிணி தாய்மார்கள், பாலுாட்டும் தாய்மார்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் இணை நோய் உள்ளவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோர் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இத்தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.மது, மாமிசம் உண்பவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆகவே தடுப்பூசியை உயிர்கவசமாக கருதி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் நமது மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் பொது மக்கள் தடுப்பூசி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04142-220700 மற்றும் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முழு ஒத்துழைக்க வேண்டும், என கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X