கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு கூட்டம்

Added : செப் 11, 2021
Share
புவனகிர-கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மாவட்டத்தில் நாளை 12 ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.சேர்மன் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர், துணைச்சேர்மன் காஷ்மீர்ச்செல்வி வினாயகம்,

புவனகிர-கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மாவட்டத்தில் நாளை 12 ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.சேர்மன் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர், துணைச்சேர்மன் காஷ்மீர்ச்செல்வி வினாயகம், கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மகளிர் திட்ட அலுவலர் வடிவு முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி பேசுகையில, கொரோனா தொற்றை கட்டுபடுத்த நாளை 12 ம் தேதி நடக்கும் சிறப்பு முகாமில் அனைவரும் பங்கேற்று பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த ஒன்றியத்தில் 50 சதவீதம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். நாளை நடக்கும் முகாமில் 100 சதவீத தடுப்பூசி போட செயல்பட வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் கலெக்டர் நேர்முக உதவியாளர் சந்திரன், தாசில்தார்கள் அன்பழகன், ஆனந்த், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், சீனிவாசன், டாக்டர் குணவதி, ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவர் தமிழ்ச்செல்விகுமரகுரு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின, விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X