பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி குடிநீர் பணியில் இறுகும் பிடி

Added : செப் 11, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை---குடிநீர் பணியில் உயர் அதிகாரிகள் கெடுபிடியால் செலவு செய்த பணத்தை பெற கால தாமதம் ஏற்படுகிறது.ஊராட்சிகளில் கடந்த காலங்களில் ஆழ்துளை கிணறு, குழாய், தண்ணீர் தொட்டி வைத்து குடிநீர் வினியோகம் பணி பல இடங்களில் நடந்தது.இந்தப் பணிகள் தேவையற்ற இடங்களில் நடந்துள்ளதாகவும், ஆழ்துளை கிணறு அமைந்த அளவிற்கு குழாய்கள் பொருத்தவில்லை எனவும், வினியோகத்திற்கு தரமற்ற

நிலக்கோட்டை---குடிநீர் பணியில் உயர் அதிகாரிகள் கெடுபிடியால் செலவு செய்த பணத்தை பெற கால தாமதம் ஏற்படுகிறது.ஊராட்சிகளில் கடந்த காலங்களில் ஆழ்துளை கிணறு, குழாய், தண்ணீர் தொட்டி வைத்து குடிநீர் வினியோகம் பணி பல இடங்களில் நடந்தது.இந்தப் பணிகள் தேவையற்ற இடங்களில் நடந்துள்ளதாகவும், ஆழ்துளை கிணறு அமைந்த அளவிற்கு குழாய்கள் பொருத்தவில்லை எனவும், வினியோகத்திற்கு தரமற்ற குழாய்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் புகார்கள் சென்றன. ஆட்சி மாற்றத்திற்குப் பின் குடிநீர் பணிகளில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது எனவும், மதிப்பீடு பட்டியலில் கூறப்பட்ட அளவுக்கு குழாய்கள் பொருத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.குடிநீர் பணி முடிந்ததும் அதிகாரிகள் குழு ஆய்வுக்குப் பின்பே செலவு தொகையை பெற முடியும் என்ற புதிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவு தொகையை பெற தாமதமாகும் என ஒப்பந்ததாரர்கள் அச்சப்படுகின்றனர். ஆய்வுப் பணியை விரைவில் முடித்து செலவு தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X