பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

Added : செப் 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், நேருஜி நகர் நவசக்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு

திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், நேருஜி நகர் நவசக்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது.கொரோனா கட்டுப்பாடால் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோயில் வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தனியார் கோயில்களில் கொரோனா விதிகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வீடுகளில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து, பழங்கள், கொழுக்கட்டை, அவல், பொரி வைத்து வழிபட்டனர்.பழநி: ஹிந்து முன்னணி சார்பில் பாலசமுத்திரம், மானூர், நெய்க்காரப்பட்டி பழநி நகரம் பகுதிகளில் 51 சிலைகள் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டன. அவற்றை மாலையில் போலீசார் பாதுகாப்புடன் இருசக்கர வாகனம், ஆட்டோக்களில் கொண்டு சென்று சண்முக நதியில் கரைத்தனர். கோட்ட செயலாளர் பாலன். பொதுச்செயலாளர் ஜெகன், பொருளாளர் அருண், செயலாளர் அருண், துணைத் தலைவர்கள் பிரவீன், ராஜா, ராஜசேகர், ரகு பங்கேற்றனர்.

கன்னிவாடி: தருமத்துப்பட்டி காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது.

சிறப்பு மலர் அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X