திண்டுக்கல் நகரில் செயல்படாத சிக்னல்களால் போக்குவரத்திற்கு சிக்கல்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-- -திண்டுக்கல் நகரில் பிரதான போக்குவரத்து பயன்பாடு உள்ள சாலைகளில் உள்ள சிக்னல்கள் எவையுமே செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கொரோனா பரவலால் ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாதது போன்ற காரணங்களால் போக்குவரத்து வாகனங்கள் குறைவாகவே இயங்கின. இதனால் பெரும்பாலும் சிக்னல்கள் தேவைப்படும் சூழல் ஏற்படவில்லை.தற்போது பெரும்பாலான

திண்டுக்கல்-- -திண்டுக்கல் நகரில் பிரதான போக்குவரத்து பயன்பாடு உள்ள சாலைகளில் உள்ள சிக்னல்கள் எவையுமே செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கொரோனா பரவலால் ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாதது போன்ற காரணங்களால் போக்குவரத்து வாகனங்கள் குறைவாகவே இயங்கின. இதனால் பெரும்பாலும் சிக்னல்கள் தேவைப்படும் சூழல் ஏற்படவில்லை.தற்போது பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது.திண்டுக்கல் நகரில் 9 சிக்னல்கள் உள்ளன. மதுரை -- வத்தலகுண்டு சாலையில் பிரிவில் உள்ள சிக்னல்கள் பல்லாண்டுகளாக செயல்படுவதில்லை. சரிசெய்ய இதுவரை அதிகாரிகள் முயற்சியும் எடுக்கவில்லை.அங்குவிலாஸ் இறக்கம், சாலை ரோடு பகுதி சிக்னல்களும் காட்சிப் பொருட்களாகவே உள்ளன. இப்பகுதியிலும் இரண்டு நாட்களாக கடும் நெரிசலை வாகன ஓட்டிகள் சந்திக்கின்றனர்.மேலும் நாகல்நகர், வாணிவிலாஸ் மேடு சிக்னல்கள் சில நேரங்களில் வேலை செய்தாலும் பல நேரங்களில் செயல்படுவதில்லை. நகருக்குள் போலீசாரை பார்ப்பதும் அரிதாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி வருகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X