சிகிச்சை; குறைமாத குழந்தைக்கு கங்காரு பராமரிப்பு* இறப்பு விகிதம் குறைக்க புதுமை ஏற்பாடு| Dinamalar

தமிழ்நாடு

சிகிச்சை; குறைமாத குழந்தைக்கு 'கங்காரு பராமரிப்பு'* இறப்பு விகிதம் குறைக்க புதுமை ஏற்பாடு

Added : செப் 11, 2021
Share
திண்டுக்கல்-'எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு 'கங்காரு பராமரிப்பு' மூலம் எடையை அதிகரிக்கலாம்' என, திண்டுக்கல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். கர்ப்ப காலம் பூர்த்தியடையாமல் பிறக்கும் குழந்தைகளே குறைமாத குழந்தைகள். பிறக்கும் குழந்தை சராசரியாக 3 கிலோ எடை இருக்க வேண்டும். குறைமாத குழந்தைகளோ 2 கிலோவுக்கு குறைவாக பிறக்கின்றன.
 சிகிச்சை; குறைமாத குழந்தைக்கு 'கங்காரு பராமரிப்பு'* இறப்பு விகிதம் குறைக்க புதுமை ஏற்பாடு

திண்டுக்கல்-'எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு 'கங்காரு பராமரிப்பு' மூலம் எடையை அதிகரிக்கலாம்' என, திண்டுக்கல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

கர்ப்ப காலம் பூர்த்தியடையாமல் பிறக்கும் குழந்தைகளே குறைமாத குழந்தைகள். பிறக்கும் குழந்தை சராசரியாக 3 கிலோ எடை இருக்க வேண்டும். குறைமாத குழந்தைகளோ 2 கிலோவுக்கு குறைவாக பிறக்கின்றன. இக்குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிப்பர்.இது தவிர இயற்கை முறையான 'கங்காரு பராமரிப்பு' சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. குட்டி வளரும் போது கங்காரு தனது வயிற்றில் உள்ள பையில் வைத்து பராமரிக்கும். \
அதேபோல் எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு இம்முறையை பின்பற்றலாம்.தாயின் மார்பில் (ஆடை அணியாமல்) குழந்தையை வைத்துக் துணியால் கட்ட வேண்டும். இதன் மூலம் குழந்தையின் வெப்பநிலை சமன் செய்யப்படுகிறது. ரத்த ஓட்டம், ரத்த துடிப்பு சீராகும். தாயின் மார்பகத்தின் அருகில் இருப்பதால் தாய்ப்பால் வாசம் அறிந்து தேடிச் சென்று குழந்தை பால் அருந்தும்.இந்த இயற்கையான செயல்பாடு குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்கும். நோய் தொற்றும் இல்லாமல் இருக்கும். தினமும் காலை, மாலையில் ஒரு மணி நேரம் அல்லது ஒரு மாதம் கூட இச்சிகிச்சையை தொடரலாம்.

இறப்பு குறையும்

திட்ட அலுவலர் பூங்கொடி கூறுகையில், ''மருத்துவமனை, இன்குபேட்டர் வசதியில்லாத மலைக்கிராமங்களில் வசிக்கும் தாய்மார்களுக்கு 'கங்காரு பராமரிப்பு' குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையால் குழந்தையின் உடல் எடை அதிகரிப்பதுடன், நோய் தொற்று இன்றி குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கும். குழந்தையின் இறப்பு விகிதமும் குறையும்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X