விமான ஓடு தள பாதை நீளம் அதிகரிக்க நடவடிக்கை | Dinamalar

தமிழ்நாடு

விமான ஓடு தள பாதை நீளம் அதிகரிக்க நடவடிக்கை

Added : செப் 11, 2021
Share
தற்போது விமான ஓடுபாதை 7 ஆயிரம் அடியாகவுள்ளது. சர்வதேச விமானங்கள், ஏர்பஸ் போன்ற பெரியரக விமானங்கள் வந்து இறங்க வசதியாக ஓடுபாதையை 12 ஆயிரம் அடியாக நீடிக்க விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் 2010ல் துவங்கின. பாப்பனோடை, குசவன்குண்டு உள்ளிட்ட ஆறு கிராமங்களில் 620 ஏக்கருக்கும் மேல் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக வழங்கப்பட்ட
விமான ஓடு தள பாதை நீளம் அதிகரிக்க நடவடிக்கை

தற்போது விமான ஓடுபாதை 7 ஆயிரம் அடியாகவுள்ளது. சர்வதேச விமானங்கள், ஏர்பஸ் போன்ற பெரியரக விமானங்கள் வந்து இறங்க வசதியாக ஓடுபாதையை 12 ஆயிரம் அடியாக நீடிக்க விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் 2010ல் துவங்கின.

பாப்பனோடை, குசவன்குண்டு உள்ளிட்ட ஆறு கிராமங்களில் 620 ஏக்கருக்கும் மேல் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக வழங்கப்பட்ட இழப்பீடு தொகை குறைவாக இருப்பதாக கூறி நில உரிமையாளர்கள் நீதிமன்றங்களுக்கு சென்றனர். இதனால் இழப்பீடு வழங்குவது தாமதமானது.இந்நிலையில் அரசு வழிகாட்டுதல் பெற்று இழப்பீடு தொகை வழங்க கலெக்டர் அனீஷ்சேகர், டி.ஆர்.ஓ.,செந்தில்குமாரி நடவடிக்கை எடுத்தனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: இதுவரை ரூ.160 கோடி வரை அரசால் வழங்கப்பட்டு நில உரிமையாளர்களுக்கு பிரித்து வழங்கப் பட்டுள்ளது.

விடுபட்டவர்கள், இழப்பீடு தொகை பெறாதவர்களை கண்டறிந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இழப்பீடு தொகை முழுமையாக வழங்கப்பட்டதும் கையகப்படுத்திய நிலங்கள் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.நிலங்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு தான் விமான ஓடுபாதை விரிவாக்க பணிகள் துவங்கும். விரைந்து இப்பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X