பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்களுக்கு மானியம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்- -திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.உதவி இயக்குனர் பேபி கூறியதாவது: வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் தோட்டக்கலை பயிர்களுக்கு இந்த ஆண்டு ரூ. 9.61 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அத்தி அல்லது கொடுக்காப்புளி பயிரிடும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம். முருங்கை, கீரை வகைகள்,

திருப்பரங்குன்றம்- -திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.உதவி இயக்குனர் பேபி கூறியதாவது: வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் தோட்டக்கலை பயிர்களுக்கு இந்த ஆண்டு ரூ. 9.61 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அத்தி அல்லது கொடுக்காப்புளி பயிரிடும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம். முருங்கை, கீரை வகைகள், மணத்தக்காளிக்கு எக்டேருக்கு தலா ரூ 10 ஆயிரம். காய்கறிகள், வெங்காயம் எக்டேருக்கு தலா ரூ. 20 ஆயிரம்.பனை நாற்று ஒன்றுக்கு ரூ.50. ஸ்டார் மல்லிகை எக்டேருக்கு ரூ.16 ஆயிரம். இயற்கை முறை காய்கறி விவசாயத்திற்கு ஊக்கத்தொகை எக்டேருக்கு ரூ.5 ஆயிரம்.வாழைத்தார் பராமரிப்பு உறைக்கு எக்டேருக்கு ரூ.12,500. 2 எக்டேருக்கும் குறைவாக காய்கறி சாகுபடி உள்ள கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்கவும், மண் வளத்தை கூட்டவும் எக்டேருக்கு ரூ. 32 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.விருப்பமுள்ள விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி புத்தகம் முதல் பக்க நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் திருநகர் 2வது பஸ் ஸ்டாப் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X