பொது செய்தி

தமிழ்நாடு

வினைகளை தீர்க்கும் விநாயகனே... சதுர்த்தி விழாவில் சிறப்பு வழிபாடு

Added : செப் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள், பண்டிகையை கொண்டாடினர்.பொள்ளாச்சி கடைவீதி பாலகணேசர் கோவிலில், விநாயக பெருமானுக்கு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், விநாயகர்
 வினைகளை தீர்க்கும் விநாயகனே... சதுர்த்தி விழாவில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள், பண்டிகையை கொண்டாடினர்.

பொள்ளாச்சி கடைவீதி பாலகணேசர் கோவிலில், விநாயக பெருமானுக்கு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்றுமுன்தினம் கணபதி ேஹாமம், திரவியாகுதி மற்றும் அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தெப்பக்குளம் வீதி ராஜகணபதி கோவில், சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜய கணபதி கோவில், குண்டலப்பட்டி செல்வகணபதி கோவில், ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில், சிவகங்கா விநாயகர் சன்னதி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், ஜோதி விநாயகர் சன்னதி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஊரடங்கு காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபாடுக்கு அனுமதி இல்லை.

தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால், பொள்ளாச்சி பகுதியில் வீடுகள் மற்றும் கோவில்கள், தனியார் இடங்களில் மொத்தம்,67 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்றரை அடி முதல், ஐந்தரை அடி வரை சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. கோவில்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து, கொழுக்கட்டை உள்ளிட்டவை வைத்து வழிபாடு செய்தனர்.உடுமலைஉடுமலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. நகரம் மற்றும் கிராமப்பகுதிகளிலுள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது; வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பிரதான கோவில் என்பதால், அரசு உத்தரவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

குட்டைத்திடல், ஆதி சக்தி விநாயகர், தேங்காய் மாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், ரயில்வே ஸ்டேஷன் சித்தி விநாயகர், காந்தி நகர் வரசித்தி விநாயகர், முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில் என விநாயகர் கோவில்களில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

-- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X