பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்! பாரம்பரியம் காக்க முயற்சி

Added : செப் 11, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : பண்டைய கிராம கலாசாரத்தை மறக்காமல் இருக்க, கோவிலில் திருமண செய்து கொண்ட மணமக்கள், மாட்டு வண்டியில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.எவ்வளவு தான் நாகரிகம் வளர்ந்தாலும், நமது பழக்க வழக்கங்களை மறக்காமல் அவ்வப்போது, நடக்கும் நிகழ்வுகளில் தங்களை வெளிப்படுத்தி கொள்வார்கள். இதேபோல், நேற்று நடந்த திருமண நிகழ்வும் அப்படிதான் பழமையை தெளிவுபடுத்தியது.
 மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்!  பாரம்பரியம் காக்க முயற்சி

கிணத்துக்கடவு : பண்டைய கிராம கலாசாரத்தை மறக்காமல் இருக்க, கோவிலில் திருமண செய்து கொண்ட மணமக்கள், மாட்டு வண்டியில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

எவ்வளவு தான் நாகரிகம் வளர்ந்தாலும், நமது பழக்க வழக்கங்களை மறக்காமல் அவ்வப்போது, நடக்கும் நிகழ்வுகளில் தங்களை வெளிப்படுத்தி கொள்வார்கள். இதேபோல், நேற்று நடந்த திருமண நிகழ்வும் அப்படிதான் பழமையை தெளிவுபடுத்தியது. கோடங்கிபாளையத்தை சேர்ந்த பிரகாசுக்கும், பனப்பட்டியை சேர்ந்த சரண்யாவுக்கும் நேற்று கிணத்துக்கடவு சிவன்கோவிலில் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின், மாப்பிள்ளை வீட்டுக்கு மணமக்களை காரில் அழைத்து செல்வது வழக்கம். வழக்கம்போல, உறவினர்களின் கார்கள் பின்தொடர, மணமக்கள் விவசாய கலாசாரத்தை நினைவூட்டும் வகையில் நேற்று, மாட்டு வண்டியில் பயணித்தனர். அதுவும், மணமகளை வண்டியில் உட்கார வைத்து, மாப்பிள்ளை வண்டியில் பூட்டிய காளைகளை வேகமாக செலுத்தினார். மாட்டு வண்டியில் மணமக்கள் வருவதை அறிந்த, கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X