தமிழ்நாடு

நாளைய சிறப்பு இலவச முகாமில் கலெக்டர் அனீஷ்சேகர் பேட்டி

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுரை -''மதுரை மாவட்டத்தில் நாளை (செப்., 12) நடக்கும் சிறப்பு இலவச முகாமில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திலுள்ள

மதுரை -''மதுரை மாவட்டத்தில் நாளை (செப்., 12) நடக்கும் சிறப்பு இலவச முகாமில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திலுள்ள தேர்தல் ஓட்டுச்சாவடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் உள்ளிட்ட 1500 இடங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பேருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை நடக்கவுள்ளது.

இதுவரை செலுத்தாதவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டோர், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.தடுப்பூசி செலுத்தியோர் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம். பொதுமக்கள் குடும்பத்தினருடன் ஆதார் அட்டையுடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 3வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.ஊராட்சிகளுக்கு சிறப்பு பரிசுகிராம ஊராட்சிகளில் நாளை நடக்கும் சிறப்பு முகாம்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவோரில் குலுக்கல் முறையில் ஐவர் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் பரிசுகள் வழங்கப்படும்.

நிர்ணயித்த இலக்குகளை எட்டும் ஊராட்சி தலைவர்கள், எழுத்தர்களில் ஐந்து பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இலக்கை எட்டும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X