பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் -திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் சதுர்த்தியையொட்டி மூலவர் கற்பக விநாயகர் சன்னதியில், உற்ஸவர் விநாயகர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் கொடுக்கப்பட்ட களிமண் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.இக்கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்களுக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு தீபாராதனை

திருப்பரங்குன்றம் -திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் சதுர்த்தியையொட்டி மூலவர் கற்பக விநாயகர் சன்னதியில், உற்ஸவர் விநாயகர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் கொடுக்கப்பட்ட களிமண் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.இக்கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்களுக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜை மூலவர், உற்ஸவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மகா கணபதி ஹோமத்தை தொடர்ந்து மாலை பல்லக்கில் சுவாமி கோயிலுக்குள் வலம் வந்தார்.பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து மாலையில் சுவாமி கோயிலுக்குள் வீதிவுலா நிகழ்வு நடந்தது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயில், திருநகர் மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.மதுரைதல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகத்திலுள்ள யோக விநாயகர் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தலைமை பொறியாளர் கிருஷ்ணன், செயற் பொறியாளர் சுகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுரேஷ்பட்டர் யாகசாலை பூஜை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X