தமிழ்நாடு

உழவர் சந்தைகள் பயன்பாடு குறித்து திடீர் விழிப்புணர்வு! ஆட்சி மாற்றத்தால் அதிகாரிகளும் மனமாற்றம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : உழவர் சந்தை பயன்பாட்டை, விவசாயிகள், பொதுமக்களிடையே அதிகரிக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு பணிகளை அதிகாரிகள் குழுவினர் துவக்கியுள்ளனர்; ஆட்சி மாற்றத்தால், மீண்டும் இச்சந்தைகள் முக்கியத்துவம் பெறத்துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக
உழவர் சந்தைகள் பயன்பாடு குறித்து திடீர் விழிப்புணர்வு! ஆட்சி மாற்றத்தால் அதிகாரிகளும் மனமாற்றம்

பொள்ளாச்சி : உழவர் சந்தை பயன்பாட்டை, விவசாயிகள், பொதுமக்களிடையே அதிகரிக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு பணிகளை அதிகாரிகள் குழுவினர் துவக்கியுள்ளனர்; ஆட்சி மாற்றத்தால், மீண்டும் இச்சந்தைகள் முக்கியத்துவம் பெறத்துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், அவ்வப்போது காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும்; விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை வழக்கம் போல கடந்த, 10 ஆண்டுகளாக செயல்பட்டன. எவ்வித மேம்பாடு, மாற்றமும் இல்லாமல், சந்தைகள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், உழவர் சந்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கிராமங்கள்தோறும் அதிகாரிகள் வாயிலாக, விவசாயிகளிடம், உழவர் சந்தையில் விளை பொருட்களை விற்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கப்படுகிறது.

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளதுடன், உழவர் சந்தைக்கு செல்லும் வழி என தனியாக பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அதில், 'விவசாயிகள், உற்பத்தி செய்த விளை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களை சந்தைப்படுத்த இலவச பஸ் வசதி, விளை பொருட்களுக்கு இலவச கடை வசதி; தராசு வசதி, கமிஷன், சுங்கம் இல்லை. விளைபொருட்களின் தரத்துக்கு ஏற்ப நியாயமான விலை நிர்ணயம், இலவச மின்சாரம், கழிப்பிட வசதி உள்ளது.

புதிய காய்கறி, பழங்கள் கிடைக்கிறது. வெளிச்சந்தை, சில்லரை விற்பனையை விட குறைவான விலை நுகர்வோருக்கு கிடைக்கிறது. சரியான எடை, பேரம் இல்லாமல் காய்கறி கிடைக்கும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அதிகளவு பயன்படுத்திக்கொள்ளவும்; நுகர்வோர்களை அதிகளவு வரவைக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.


தனியிடம் தேவை!


ரசாயன பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கை வேளாண் முறையில், காய்கறி உற்பத்தி செய்ய பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு இடையூறுகளை தாண்டி, இவ்வகை உற்பத்தியில், ஈடுபட்டாலும், சந்தைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால், இயற்கை வேளாண் விவசாயிகள், சோர்வுக்குள்ளாகின்றனர். எனவே, உழவர் சந்தையில், இத்தகைய விவசாயிகளுக்கு தனியாக கடை ஒதுக்கீடு செய்தால், பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X