புறநகரில் தெறிக்கவிடும் ஒலிபெருக்கி

Added : செப் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை -மதுரை நகர்ப்புறங்களில் ஓவர் சவுண்ட் ஒலி பெருக்கிகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் புறநகரில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் காது கிழியும் அளவிற்கு ஒலிபெருக்கிகளை ஒவர் சவுண்டில் ஒலிக்கவிட்டு தெறிக்க விடுகிறார்கள்.சமூக ஆர்வலர் சக்தி கூறியதாவது: புறநகர் பகுதிகளில் கல்யாண மண்டபங்கள், வீடுகளில் நடக்கும் விசேஷங்கள், கோயில் விழாக்கள், அரசியல் கூட்டங்கள்,

மதுரை -மதுரை நகர்ப்புறங்களில் ஓவர் சவுண்ட் ஒலி பெருக்கிகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் புறநகரில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் காது கிழியும் அளவிற்கு ஒலிபெருக்கிகளை ஒவர் சவுண்டில் ஒலிக்கவிட்டு தெறிக்க விடுகிறார்கள்.சமூக ஆர்வலர் சக்தி கூறியதாவது: புறநகர் பகுதிகளில் கல்யாண மண்டபங்கள், வீடுகளில் நடக்கும் விசேஷங்கள், கோயில் விழாக்கள், அரசியல் கூட்டங்கள், தலைவர்கள், நடிகர்களின் பிறந்த நாட்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் ஓவர் சவுண்ட் ஒலிபெருக்கி வைக்கிறார்கள்.விழாக்களை நடத்துபவர்களுக்கு ஓவர் சவுண்ட் ஒலிபெருக்கி வைப்பது சட்டத்திற்கு புறம்பானது என்ற விழிப்புணர்வு இல்லை. முதியோர், நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் வீட்டில் கொண்டாடும் விசேஷங்களுக்காக ரோட்டில், தெருவில் ஒலிபெருக்கி வைத்து அனைவரது நிம்மதியை கெடுப்பது நியாயமல்ல. உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டு முறைகள் குறித்து சுட்டி காட்டியுள்ளது. அதிகாரிகள் ஓவர் சவுண்ட் ஒலிபெருக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manguni -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-202106:38:07 IST Report Abuse
manguni ஆமா ப்ரோ.. நானும் பாதிக்கபடுறேன்.. சொன்னாலும் கேட்க மாட்டனுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X