பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சியில் வீடுகள் மற்றும் தனியார் இடங்களில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இவை நேற்று மாலை அம்பராம்பாளையம் ஆறு, நெகமம், கெடிமேடு பகுதிகளில் விசர்ஜனம்
 விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

பொள்ளாச்சியில் வீடுகள் மற்றும் தனியார் இடங்களில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இவை நேற்று மாலை அம்பராம்பாளையம் ஆறு, நெகமம், கெடிமேடு பகுதிகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 67 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ஒன்றியத்தில், இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்த, 9 விநாயகர் சிலைகள் முத்துமலை அருகே, ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இருப்பினும், கோவில்கள் மற்றும் சொந்த இடங்களில், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, மக்கள் வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய இந்து முன்னணியினர் அரசம்பாளையம், கொண்டம்பட்டி கிராமங்களிலும், மேற்கு ஒன்றியம் சார்பில், கிணத்துக்கடவு, சிங்கையன்புதுார், கல்லாங்காட்டுபுதுார் உள்ளிட்ட, ஏழு இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டு, நேற்று மாலை சிலைகளை விசர்ஜனம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை தொடந்து, 9 சிலைகளும் முத்துமலையாண்டவர் மலையடிவாரத்துக்கு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள நீர் நிலையில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நெகமம் பகுதி இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்த, 14 விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அம்பராம்பாளையம் மற்றும் பி.ஏ.பி., கால்வாயில், விசர்ஜனம் செய்யப்பட்டன.

வால்பாறை

வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று காலை, சுப்பிரமணிய சுவாமி கோவில் விநாயகருக்கு சிறப்பு யாக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.வால்பாறை தாலுகா, இந்து முன்னணி சார்பில், வால்பாறை நகர், முடீஸ், சோலையாறு உள்ளிட்ட, 22 இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.வீடு மற்றும் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாலை, நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசந்தர், தாலுகா பொதுசெயலாளர் சேகர், ஒன்றிய தலைவர் ஜெயன், ஒன்றிய செயலாளர் சதீஸ் செய்திருந்தனர்.

உடுமலை

உடுமலை சப்-டிவிஷனுக்குட்பட்ட, உடுமலை போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 19 இடங்களிலும், குடிமங்கலம், இந்து முன்னணி, 10, பொதுமக்கள், 3, மடத்துக்குளம், இ.மு.,8, பொதுமக்கள், 2, கொமரலிங்கம், இ.மு.,8, பொதுமக்கள்,3, தளி, இ.மு.,13, அமராவதி, 2, கணியூர், இ.மு.,1, பொதுமக்கள்,6, என இந்து முன்னணி சார்பில், 61 இடங்களிலும், பொதுமக்கள் சார்பில், 13 இடங்கள் என, தனியார் நிலங்கள், கோவில்களில், 74 இடங்களில், நேற்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.மாலை, எஸ்.பி.,புரம், பி.ஏ.பி.,கால்வாயில் மற்றும் அமராவதி ஆற்றில் தனித்தனியாக வந்து, பொதுமக்கள் சிலைகளை விசர்ஜனம் செய்தனர்.

மடத்துக்குளம்

மடத்துக்குளத்தில், ராஜகணபதி கோவில் அருகே, மதுரை வீரன் கோவில் பகுதி உள்ளிட்ட 11 இடங்களில் இந்து முன்னணியினரால், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.மடத்துக்குளம் பகுதியில் பல இடங்களில் அமைக்கப்பட்ட சிலைகள், எடுத்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் மாலையில் விசர்ஜனம் செய்யப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

-நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X