மாற்று சிலை வாங்கி கொடுத்த போலீசார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று சிலை வாங்கி கொடுத்த போலீசார்

Added : செப் 11, 2021
Share
திருமங்கலம் -கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ளது.திருமங்கலம் அருகே செங்குளம் விநாயகர் கோயிலில் மூன்றடி உயரமுள்ள விநாயகர் சிலையை கிராமத்தினர் வைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு சென்ற போலீசார் சிலையை எடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அருகிலுள்ள கண்மாயில்

திருமங்கலம் -கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ளது.திருமங்கலம் அருகே செங்குளம் விநாயகர் கோயிலில் மூன்றடி உயரமுள்ள விநாயகர் சிலையை கிராமத்தினர் வைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு சென்ற போலீசார் சிலையை எடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அருகிலுள்ள கண்மாயில் கரைத்தனர்.இதை கண்டித்து ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் போலீஸ் ஸ்டேஷனை கிராமத்தினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோயிலுக்குள் யாருக்கும் இடையூறு இன்றி வைக்கப்பட்டதையும் சுட்டி காட்டினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கரைத்த சிலைக்கு பதிலாக அதே அளவு மாற்று சிலை வாங்கி கொடுத்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X