பனியில் மூழ்கும் தேயிலை வனம்; மனம் மயங்கி ரசிக்கும் மக்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனியில் மூழ்கும் தேயிலை வனம்; மனம் மயங்கி ரசிக்கும் மக்கள்

Added : செப் 11, 2021
Share
வால்பாறை : வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, மலையில், பசுமை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும், தேயிலை எஸ்டேட்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.விடுமுறை நாட்களில், இயற்கையை ரசிக்கவும், குளிர்ந்த சீதோஷ்ணத்தை உணரவும், சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். அதற்கேற்ப, எஸ்டேட் பகுதிகளில், காலை, மாலை நேரங்களில், பனி மூட்டம் நிலவுகிறது.அதே வேளையில், அதிக
 பனியில் மூழ்கும் தேயிலை வனம்; மனம் மயங்கி ரசிக்கும் மக்கள்

வால்பாறை : வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, மலையில், பசுமை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும், தேயிலை எஸ்டேட்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.

விடுமுறை நாட்களில், இயற்கையை ரசிக்கவும், குளிர்ந்த சீதோஷ்ணத்தை உணரவும், சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். அதற்கேற்ப, எஸ்டேட் பகுதிகளில், காலை, மாலை நேரங்களில், பனி மூட்டம் நிலவுகிறது.அதே வேளையில், அதிக பனிமூட்டத்தால், தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கவர்க்கல், சக்தி - தலநார் எஸ்டேட் பகுதி முழுவதும் பனிபடர்ந்து காணப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X