பொது செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி 24 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா 'ஜோர்'

Added : செப் 11, 2021
Share
Advertisement
அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி சார்பில், 24 பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, மாலையில் பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.அன்னுார் வட்டாரத்தில், அன்னுார் நகர், கஞ்சப்பள்ளி, கணேசபுரம், அக்கரை செங்கப்பள்ளி, அச்சம்பாளையம், ஜெ.ஜெ. நகர் உட்பட, 24 இடங்களில், தடையை மீறி நேற்று அதிகாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.மாலை 4:00

அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி சார்பில், 24 பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, மாலையில் பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

அன்னுார் வட்டாரத்தில், அன்னுார் நகர், கஞ்சப்பள்ளி, கணேசபுரம், அக்கரை செங்கப்பள்ளி, அச்சம்பாளையம், ஜெ.ஜெ. நகர் உட்பட, 24 இடங்களில், தடையை மீறி நேற்று அதிகாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.மாலை 4:00 மணிக்கு, அனைத்து விநாயகர் சிலைகளும், அன்னுார் ஓதிமலை சாலைக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.

சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், சிறுமுகை பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்ய கொண்டு சென்றனர். இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் குட்டி, விசர்ஜனத்துக்கு அனுப்பி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி, நகர தலைவர் சிவக்குமார், ஒன்றிய தலைவர்கள் மாரப்பன், பிரகாஷ் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போலீசார், விநாயகர் சிலை செல்லும் வாகனங்களில் நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறி மற்றவர்களை இறக்கி விட்டனர்; சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அன்னுார் போலீசார் 50 பேர், தாசில்தார்கள் ரத்தினம், ரங்கராஜன் உள்ளிட்டோர் விநாயகர் சதுர்த்தி விழாவை கண்காணித்தனர்.

பிள்ளையப்பம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு, விநாயகர் சதுர்த்தி பந்தலை போலீசார் சிலருடன் சேர்ந்து அகற்றியதால், மாவட்ட நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். மறியலில் ஈடுபடப் போவதாக கூறினர். இன்ஸ்பெக்டர் நித்யா பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X