பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகாது நீர்... 70 சதவீதம் வரை சேமிப்பு! 'வழி' காட்டும் வேளாண் துணை இயக்குனர்

Added : செப் 11, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : ''நுண்ணுயிர் பாசன முறையில் சொட்டுநீர், தெளிப்பு நீர் மற்றும் துாவுவான் முறையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினால், 70 சதவீதம் நீரை சேமிக்கலாம்,'' என, வேளாண் துணை இயக்குனர் பேசினார்.காரமடை வட்டாரம், சிறுமுகை அடுத்த சின்னகள்ளிபட்டியில், வேளாண் உழவர் நலத்துறை, விரிவாக்க துணை இயக்கம், தொழில்நுட்ப மேலாண் முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டம் சார்பில்,

மேட்டுப்பாளையம் : ''நுண்ணுயிர் பாசன முறையில் சொட்டுநீர், தெளிப்பு நீர் மற்றும் துாவுவான் முறையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினால், 70 சதவீதம் நீரை சேமிக்கலாம்,'' என, வேளாண் துணை இயக்குனர் பேசினார்.

காரமடை வட்டாரம், சிறுமுகை அடுத்த சின்னகள்ளிபட்டியில், வேளாண் உழவர் நலத்துறை, விரிவாக்க துணை இயக்கம், தொழில்நுட்ப மேலாண் முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டம் சார்பில், நுண்ணுயிர் பாசன முறை குறித்து விளக்க கூட்டம் நடந்தது.காரமடை வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார்.

கோவை வேளாண் துணை இயக்குனர் ஷபி அகமது நுண்ணீர் பாசனம் முறைகள் குறித்து பேசியதாவது:நுண்ணீர் பாசனம் அமைப்பது, தற்போதைய கால சூழலுக்கு மிகவும் முக்கியமானது. சொட்டு நீர், தெளிப்பு நீர், துாவுவான், தெளிப்பான் முறையில் பயிர்களுக்கு தேவையான நீரை, விரையமின்றி பயன்படுத்தலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் வாயிலாக, குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர்களை விளைவிக்கலாம். சொட்டுநீர் பாசன முறையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினால், 70 சதவீதம் நீரை சேமிக்கலாம்.மேலும், ரசாயன உரங்களை நீரில் கலந்து இடுவதால், 50 சதவீதம் வரை உரச் செலவு குறைகிறது. தண்ணீர் பாய்ச்ச ஆட்கூலி சேமிக்கப்படுகிறது. இந்த பாசன முறையில் மூன்று மடங்கு வரை அதிக மகசூலும், லாபமும் கிடைக்கிறது.

குறைந்தளவு களைகளே வளர்கிறது. இந்த நீர் பாசன முறையில் மேடு, பள்ளமான பகுதிகளிலும் பயிர் சாகுபடி செய்யலாம். திட்டத்தில், அனைத்து சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் பயன்பெறலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் வள்ளியம்மை, நுண்ணீர் பாசனம் குறித்து, பயிற்சி அளித்து பேசியதாவது:வேளாண்மையில் நீர் நிர்வாகத்தில், சொட்டு நீர் பாசன முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிலங்களில் களை பெருக்கத்தை வராது தடுக்கும். நீர் உப்புத் தன்மை காரணமாக, குழாயில் உப்பு படிவதை கண்டும் காணாது பலர் உள்ளனர்.

இது நாளடைவில் பைப்புகளை கடினப்படுத்தி, நீர் செல்லும் வழி பாதை குறுகி விடும். இதனால் பயிர்களுக்கு தண்ணீர் செல்லும் பகுதி தடைபடும். பைப்புகளில் உப்பு படிவதை நீக்கும், அற்புத சிகிச்சை முறை தான் அமிலம். இதை பயன்படுத்தி குழாயில் படியும் வெள்ளை நிற மாவு போன்ற கால்சியம் கார்பனேட் எனப்படும் உப்பை வெளியேற்றலாம்.இவ்வாறு, அவர் பேசினார். விவசாயிகள் சந்தேகங்களை கேட்டறிந்தனர். 'அட்மா' திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X