பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்; 1.50 லட்சம் பேருக்கு இலக்கு

Added : செப் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை : மெகா தடுப்பூசி முகாமை முன்னிட்டு பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முகாம் காலை, 7:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்க உள்ளது. ஒரே நாளில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வ.உ.சி., மைதானம், போலியோ சொட்டு மருந்து போடும் இடங்கள் என, 1,500 இடங்களில்

கோவை : மெகா தடுப்பூசி முகாமை முன்னிட்டு பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முகாம் காலை, 7:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்க உள்ளது. ஒரே நாளில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வ.உ.சி., மைதானம், போலியோ சொட்டு மருந்து போடும் இடங்கள் என, 1,500 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.மாநகராட்சியின், 100 வார்டுகளில், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குறும்படங்கள், சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மாநகராட்சி பகுதிகளில்...கோவை மாநகராட்சி பகுதியில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக, 13 லட்சம் பேர் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில், 11 லட்சம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியிருக்கிறது.

முதல் டோஸ் செலுத்தி விட்டு, 84 நாட்கள் கடந்து, இரண்டாவது டோஸ்க்காக, 80 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர்.இவர்கள் தடுப்பூசி போடாவிட்டால், முதல் டோஸ் செலுத்தியதற்கான பலன் கிடைக்காமல் போய்விடும். அதனால், மெகா முகாம் நடத்தி, தடுப்பூசி செலுத்த, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை இணைந்து முடிவு செய்தது.

மாவட்ட அளவில், 1,500 முகாம்கள், 1.5 லட்சம் தடுப்பூசி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில், 300 இடங்களில் தலா, 200 டோஸ் வீதம், 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 25 மொபைல் டீம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை, 12 மணி நேரம் தொடர்ச்சியாக முகாம் நடத்தப்படும். ஏதேனும் ஒரு மையத்தில் மருந்து இருப்பு இல்லை என தகவல் வந்தால், மொபைல் குழுவினர் விரைந்து சென்று வழங்குவர்.இதுதவிர, வ.உ.சி., பூங்கா மைதானத்தில் பெரிய அளவிலான முகாம், பூங்காவை சுற்றிலும், 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த இருப்பதாக, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202113:54:28 IST Report Abuse
Ram Pollachi முகாமின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X