சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணம் செய்வதாக விதவையிடம் மோசடி

Added : செப் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை : சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் 32 வயது பெண்; தனியார் நிறுவன ஊழியர். இவரது கணவர் 2012ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். அப்பெண் இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டு இணையதளத்தில் பதிவு செய்தார். கோவை சிங்காநல்லுார் நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த தோல் வியாபாரி ராம்குமார், 40, பெண்ணை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார். இருவருக்கும் இடையே

கோவை : சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் 32 வயது பெண்; தனியார் நிறுவன ஊழியர். இவரது கணவர் 2012ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். அப்பெண் இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டு இணையதளத்தில் பதிவு செய்தார்.

கோவை சிங்காநல்லுார் நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த தோல் வியாபாரி ராம்குமார், 40, பெண்ணை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக வியாபார தேவைக்காக பெண்ணிடம் இருந்து பல கட்டங்களாக, ரூ.15 லட்சம் மற்றும் மூன்று பவுன் நகைகளை பெற்றார்.

இந்நிலையில் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார்.இது குறித்து, அப்பெண்ணுக்கு தெரிந்தது. அவரிடம் பணம், நகையை திருப்பிக் கேட்டபோது, ராம்குமார் கொலை மிரட்டல் விடுத்தார். அப்பெண் கோவை கிழக்குமகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202113:56:55 IST Report Abuse
Ram Pollachi போஸ்கோ சட்டம் பாயமல் இருந்தால் நலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X