அரசு பள்ளிக்கு ரூ.27.40 லட்சத்தில் மூன்று புதிய வகுப்பறைகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிக்கு ரூ.27.40 லட்சத்தில் மூன்று புதிய வகுப்பறைகள்

Added : செப் 11, 2021
Share
தேவதானப்பட்டி-வடுகபட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பழனியாண்டி,தனது ஓய்வூதிய சேமிப்பில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.27.40 லட்சம் செலவில் 3 வகுப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார்.பெரியகுளம், வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எஸ்.பழனியாண்டி 92.இவரின் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை பள்ளி வளர்ச்சிக்கு செலவிடதிட்டமிட்டு பல

தேவதானப்பட்டி-வடுகபட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பழனியாண்டி,தனது ஓய்வூதிய சேமிப்பில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.27.40 லட்சம் செலவில் 3 வகுப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார்.பெரியகுளம், வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எஸ்.பழனியாண்டி 92.இவரின் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை பள்ளி வளர்ச்சிக்கு செலவிடதிட்டமிட்டு பல ஆண்டுகளாக பணம் சேமித்தார்.சில மாதங்களுக்கு முன் இவரும், இவரது மனைவி புஷ்பம், வங்கி மேலாளரான மகன் ஞானசேகருடன், தேனி முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜியை சந்திந்தனர். 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை, புதியவகுப்பறை கட்டித்தர சி.இ.ஓ., கோரினார். அதை ஏற்று பள்ளிக்கு ரூ.27.40 லட்சத்தில் 3 வகுப்பறைகள் கட்டினார்.திறப்பு விழா: புதிய வகுப்பறைகளை ஓய்வு தலைமையாசிரியர்பழனியாண்டி, புஷ்பம், ஞானசேகரன் திறந்து வைத்தனர்.தலைமையாசிரியர் மோகன், பெற்றோர்ஆசிரியர் கழகத்தலைவர் சுப்பையா வரவேற்றனர். பள்ளி சார்பில் பழனியாண்டி குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X