பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
தேனி,-தேனி மாவட்டத்தில் நேற்று 297 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கொரோனா பரவலால் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க கூடாது, வீடுகளில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறியது. இதற்கு பா.ஜ.வினர், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நேற்று தேனி மாவட்டத்தில் கோலாகலமாக

தேனி,-தேனி மாவட்டத்தில் நேற்று 297 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கொரோனா பரவலால் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க கூடாது, வீடுகளில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறியது. இதற்கு பா.ஜ.வினர், ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நேற்று தேனி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி பெத்தாட்சி கோயில், மொம்மையகவுண்டன்பட்டி, அரண்மனை புதுார், அன்னஞ்சி, அம்மாபுரம் உள்பட 29க்கும் அதிகமான இடங்களிலும், ஹிந்து முன்னணி சார்பில் சேனைத்தலைவர் மஹால் ரோடு உள்பட 14 இடங்களிலும், பா.ஜ., சார்பில் பகவதி அம்மன் கோயில் தெருவிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ேஹாமங்கள், பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபட்டனர். மாவட்டம் முழுதும் மொத்தம் 297 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் நேற்று மாலை 107 சிலைகள் எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. 148 சிலைகள் இன்றும், 42 சிலைகள் நாளையும் கரைக்கப்பட உள்ளது.* பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விநாயகர் ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் மீனாட்சி சுந்தரம் செய்தார். பாலசுப்பிரமணியர் வராகநதி விநாயகர், காளியம்மன் கோயில் விநாயகர், வணிகவைசியர் தெரு சங்கவிநாயகர், குருவப்ப பிள்ளையார் கோயில் விநாயகர், தேவதானபட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் மஞ்சளாறு கரையோரம் விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடந்தது. பெரியகுளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் ஏராளமானோர் வீடுகளில் விநாயகர் வைத்து பூஜை செய்தனர்.* வடுகபட்டி பா.ஜ., ஐ.டி.பிரிவு மாநில செயலாளர் வசந்த் பாலாஜி வீட்டின் முன் விநாயகர் சிலை பூஜை நடந்தது. முன்னாள் ஒன்றிய தலைவர் சேது உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். வீட்டிற்கு முன் தென்கரை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* போடி புதுார் சங்கர விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. குலாலர்பாளையம் விநாயகர் கோயில், போடி அணைப்பிள்ளையார் கோயில், சந்தை பேட்டை விநாயகர் கோயில், அக்ரஹார விநாயகர், அமராவதிநகர் விநாயகர் கோயில், கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் உள்ள விநாயகர், இந்து முன்னனி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. விநாயகருக்கு பொங்கல் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.* போடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வீடுதோறும் விநாயகர் வைத்து வழிபடும் வகையில் 33 வார்டுகளிலும் 500 க்கும் மேற்பட்ட சிலைகளை இந்து முன்னணி நகர தலைவர் செல்வம் தலைமையில் வழங்கப்பட்டது. விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டி தலைமையில் நடந்தது.* ஆண்டிபட்டி: ஹிந்து முன்னணி சார்பில் ஆண்டிபட்டியில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆண்டிபட்டி சீனிவாசா நகர் குடியிருப்பில் மூன்று அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு முன்னிலையில் விநாயகருக்கு பொங்கல், சுண்டல், பொறிகடலை, அவல், பழங்கள் வைத்து பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர். நிர்வாகிகள் கனகராஜ், வேலன், மனோஜ்குமார், கருப்பையா, பகவதி, அன்னையர் முன்னணி நகர் தலைவி சுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டி பூக்காரத்தெரு, சக்கம்பட்டி ஆதிபராசக்தி நகர் உட்பட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீடுகளில் சிலை வைத்து சதுர்த்தி விழா கொண்டாடினர்.* கம்பம் உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில ஹிந்து முன்னணி பா.ஜ.உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் வீடுகள், கோயில்களில் 121 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று விநாயகர் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுருளிப்பட்டி நாராயணன்த்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. கம்பம், உத்தமபாளையம பகுதிகளில் இன்று கரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X