பொது செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க...! மறக்க முடியுமா புலமைப்பித்தனை

Added : செப் 11, 2021
Share
Advertisement
'நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்கநாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன...'- இந்த பாடலை எழுதிய கவிஞர் புலமைப்பித்தனை, தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நம் கோவைக்காரர் என்பது அனைவரும் அறிந்திருக்க நியாயமில்லை.கோவை பள்ளபாளைத்தில் பிறந்த, ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன், மில் தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கியவர். பின்னர் படித்து புலவர்
 நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க...!  மறக்க முடியுமா புலமைப்பித்தனை

'நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்கநாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன...'- இந்த பாடலை எழுதிய கவிஞர் புலமைப்பித்தனை, தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நம் கோவைக்காரர் என்பது அனைவரும் அறிந்திருக்க நியாயமில்லை.

கோவை பள்ளபாளைத்தில் பிறந்த, ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன், மில் தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கியவர். பின்னர் படித்து புலவர் பட்டம் பெற்று, தமிழாசிரியராக பணியாற்றினார்.இலக்கிய தரமான மரபுக்கவிதைகளை எழுதி வந்த புலமைபித்தனுக்கு, எம்ஜிஆரின் 'குடியிருந்த கோயில்' திரைப்படத்தின் மூலம், திரைப்பட பாடலாசிரியராக ஆகும் வாய்ப்பு கிடைத்து.

இவரது பாடல் வரிகள், எம்.ஜி.ஆர்க்கு அதிகம் பிடித்துப் போனதால், தொடர்ச்சியாக எம்.ஜி.ஆரின் பல படங்களில் பாடல்கள் எழுதினார்.குடியிருந்த கோயில் படத்தில் துவங்கி, 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் வரை எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பாடல்கள் எழுதி, அவரது பேவரைட் ஆனார்.திரைப்படத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் எம்.ஜி.ஆருடன் தொடர்ந்து பயணித்தார். எம்.ஜி.ஆர்., முதல்வரான பிறகு, இவர் தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும், அ.தி.மு.க., அவைத்தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில், 1968ம் ஆண்டு பாடலாசிரியராக அறிமுகமான புலமைபித்தன், ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். 'அடிமை பெண்' திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் உருவான, 'ஆயிரம் நிலவே வா' பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழில் பாடிய முதல் பாடலாகும். இந்தப் பாடலை எழுதியவர் புலமைப்பித்தன்.

எம்.ஜி.ஆர்., படங்களில் துவங்கி, இன்றைய இளம் நடிகர்கள் நடித்த படங்கள் வரை பாடல்கள் எழுதிய கவிஞர் புலமைப்பித்தன், இன்றைக்கு நம்மோடு இல்லை என்றாலும், அவர் எழுதிய கவித்துவமான சினிமா பாடல்கள், நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X