பொது செய்தி

தமிழ்நாடு

அமலுக்கு வந்தன புதிய சரகங்கள்! துணை கமிஷனர்களுக்கு புது பொறுப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகர போலீசில் பழைய நடைமுறை மாற்றப்பட்டு, துணை கமிஷனர் வடக்கு மற்றும் தெற்கு என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ், 15 சட்டம்- ஒழுங்கு, 15 புலனாய்வு பிரிவு, 3 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், போக்குவரத்து பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மாநகர குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் உள்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள்

கோவை : கோவை மாநகர போலீசில் பழைய நடைமுறை மாற்றப்பட்டு, துணை கமிஷனர் வடக்கு மற்றும் தெற்கு என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ், 15 சட்டம்- ஒழுங்கு, 15 புலனாய்வு பிரிவு, 3 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், போக்குவரத்து பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மாநகர குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் உள்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் செயல்படுகின்றன.கமிஷனரின் கீழ் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர், புலனாய்வு பிரிவு(முன்பு குற்றப்பிரிவு), போக்குவரத்து, தலைமையிட மற்றும் ஆயுதப்படை துணை கமிஷனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர், புலனாய்வு(குற்றப்பிரிவு) பிரிவு துணை கமிஷனர் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, துணை கமிஷனர் வடக்கு மற்றும் தெற்கு என, மாற்றப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு, புலனாய்வு பிரிவு என, தனித்தனியாக இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, துணை கமிஷனர்(வடக்கு) மற்றும் துணை கமிஷனர்(தெற்கு) என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர், நேற்று மாற்றம் செய்து உத்தரவிட்டார்.இதன்படி, துணை கமிஷனர்(வடக்கு) கட்டுப்பாட்டின் கீழ் மாநகரில் ஆர்.எஸ்.புரம், உக்கடம், காட்டூர், சாய்பாபாகாலனி ஆகிய நான்கு சரகங்கள் துவங்கப்பட்டுள்ளன.

இதனுடன், மேற்கு மற்றும் மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, கட்டுப்பாட்டு அறை, நெடுஞ்சாலை ரோந்து பணி உள்ளிட்டவை அடங்கும்.துணை கமிஷனர்(தெற்கு) கட்டுப்பாட்டின் கீழ், சிங்காநல்லுார், போத்தனுார், குனியமுத்துார் சரகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கிழக்கு பகுதி அனைத்து மகளிர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டுள்ளன.

தலைமையிட துணை கமிஷனரின் கீழ், 'சைபர் க்ரைம்' போலீஸ், சைபர் லேப், மாநகர குற்றப்பிரிவு, மோப்பநாய் பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உள்ளிட்டவை செயல்பட உள்ளன. போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை துணை கமிஷனர்களுக்கு, பழைய நிலையே தொடர உள்ளது.புதிய உத்தரவுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X