தனியார் கல்லுாரியில் ஒருங்கிணைப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் கல்லுாரியில் ஒருங்கிணைப்பு விழா

Added : செப் 11, 2021
Share
கோவை : ஆவாரம்பாளையம், ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், 30ம் ஆண்டு ஒருங்கிணைப்பு விழா நடந்தது.எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி பேசுகையில், ''சுய சிந்தனையும் செயல்திறனும் மிக்க சமூக அக்கறை கொண்ட பொறுப்புள்ள குடிமக்களாக நீங்கள் மாற வேண்டும்,'' என்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பிரிக்கால் மனிதவள

கோவை : ஆவாரம்பாளையம், ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், 30ம் ஆண்டு ஒருங்கிணைப்பு விழா நடந்தது.எ

ஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி பேசுகையில், ''சுய சிந்தனையும் செயல்திறனும் மிக்க சமூக அக்கறை கொண்ட பொறுப்புள்ள குடிமக்களாக நீங்கள் மாற வேண்டும்,'' என்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பிரிக்கால் மனிதவள மேம்பாட்டுத்துறை துணை மேலாளர் கிருத்திகா செல்வராஜ் பேசுகையில், ''கல்வி மறுக்கப்பட்ட சூழலில் முத்துலட்சுமி ரெட்டி, மலாலா ஆகியோர் தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடி, அவர்களே எடுத்த தொடர் முயற்சிகளின் பலன்தான் அவர்களின் வெற்றி. ''நீங்களும் உங்களுக்கான வெற்றிகளைத் தேடிப் பெற வேண்டும். இணையத்தை நல்ல வழிகளில் பயன்படுத்தி மாணவிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X