தனியாருக்கு தாரை வார்ப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியாருக்கு தாரை வார்ப்பு

Added : செப் 11, 2021
Share
கோவை : மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டுமென எஸ்.ஆர்.எம்.யூ., கோரிக்கை விடுத்துள்ளது.சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யூ.,) பொதுச்செயலாளர் கண்ணையா அறிக்கை:வரும், 2024-25 நிதி ஆண்டுக்குள் ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, சொந்தமான, 6 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை, 35 முதல், 99 ஆண்டுகள் வரை

கோவை : மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டுமென எஸ்.ஆர்.எம்.யூ., கோரிக்கை விடுத்துள்ளது.

சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யூ.,) பொதுச்செயலாளர் கண்ணையா அறிக்கை:வரும், 2024-25 நிதி ஆண்டுக்குள் ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, சொந்தமான, 6 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை, 35 முதல், 99 ஆண்டுகள் வரை குத்தகை என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இத்திட்டத்தால், நிச்சயம் ரயில் கட்டணம் உயரும்.

இதர பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் விலை, சாலை சுங்க கட்டணம், மின் கட்டணம் பல மடங்கு உயரும். ஆகவே, தனியார்மயமாக்கும் முயற்சியை, மத்திய அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X