பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சுயபரிசோதனை 'கிட்' வாங்கி பயன்படுத்த ஆளில்லை!

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா சுயபரிசோதனை கிட், விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதாக, மருந்து விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இருந்து வந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது. இரண்டாம் அலையின் போது, ஏராளமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகினர்.இதன் காரணமாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைக்கருத்தில்

கோவை : கொரோனா சுயபரிசோதனை கிட், விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதாக, மருந்து விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இருந்து வந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது. இரண்டாம் அலையின் போது, ஏராளமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகினர்.இதன் காரணமாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைக்கருத்தில் கொண்டு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால்(ஐ.சி.எம்.ஆர்.,) அங்கீகரிக்கப்பட்ட சுய கொரோனா பரிசோதனை கிட் அறிமுகப்படுத்தப்பட்டது.

விலை, 250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களாகியும், இதுவரை இந்த கிட் விற்பனை சூடுபிடிக்கவில்லை. இது குறித்த விழிப்புணர்வு போதுமான அளவு இல்லாததால், விற்பனை சூடுபிடிக்கவில்லை என, மருந்து விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கோவை மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கருப்பையா கூறுகையில், ''சென்னையில் சுய பரிசோதனை கிட் அறிமுகப்படுத்தப்பட்ட பின், கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. ஒரு சிலர் மட்டுமே இந்த கிட் வாங்கிச் செல்கின்றனர்.

ஐ.சி.எம்.ஆர்., அங்கீகரித்த கிட் என்றாலும், துல்லியமான முடிவுகள் கிடைப்பதில்லை. கிட்டின் மூலம் பரிசோதிக்கும் போது கொரோனா 'பாசிட்டிவ்' என வந்தாலும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் 'நெகட்டிவ்' என வருகிறது.இந்த சுயபரிசோதனை கிட்டில், நெகட்டிவ் என வந்தாலும் அவர்கள் சந்தேகத்துக்கு இடமான நபர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.

சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மட்டுமே துல்லியமான முடிவை தரும். எனவே, அந்நடைமுறையை பின்பற்றுவதே சரியானது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X