பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரி இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம் 

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோவை : கோவை அரசு கலை கல்லுாரியில் காலியாகவுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இன்று துவங்கவுள்ளது.முதல்கட்ட கலந்தாய்வு ஆக., 26ம் தேதி முதல் துவங்கி செப்., 8ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில், 22 இளங்கலை பிரிவில் மொத்தமிருந்த, 1,433 இடங்களில், 908 இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். மீதமுள்ள, 525 இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு துவங்குகிறது.அதன் படி, 11ம் தேதி வணிகவியல்,

கோவை : கோவை அரசு கலை கல்லுாரியில் காலியாகவுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இன்று துவங்கவுள்ளது.

முதல்கட்ட கலந்தாய்வு ஆக., 26ம் தேதி முதல் துவங்கி செப்., 8ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில், 22 இளங்கலை பிரிவில் மொத்தமிருந்த, 1,433 இடங்களில், 908 இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். மீதமுள்ள, 525 இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு துவங்குகிறது.அதன் படி, 11ம் தேதி வணிகவியல், வணிகவியல் சி.ஏ., ஐ.பி., பி.பி.ஏ., பாடங்களுக்கும், 13 ம் தேதி வேதியியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம், உளவியல் துறைகளுக்கும், 14ம் தேதி புள்ளியியல், தாவரவியல், விலங்கியல், புவி அமைப்பியல், புவியியல், 15ம் தேதி பொருளாதாரம், பாதுகாப்பியல், பொதுநிர்வாகம், அரசியல் அறிவியல், 16ம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கும்.

அழைப்பு விடுக்கப்பட்ட மாணவர்கள் உரிய சான்றிதழ், கட்டணத்துடன் கலந்தாய்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூடுதல் இடங்கள்அரசு கல்லுாரிகளில், கலை பாடப்பிரிவில் 25 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவில் ஆய்வக வசதிக்கு ஏற்ப, 25 சதவீத இடங்களில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கு, பல்கலையின் ஒப்புதல் பெறவேண்டியது அவசியம். அரசு கலை கல்லுாரியில் எந்தெந்த துறைகளில் கூடுதல் இடங்கள் சேர்க்கவேண்டும் என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது.கூடுதலாக சேர்க்கப்படும் இடங்களுக்கும் சேர்த்து, மூன்றாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என கல்லுாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல் இரண்டு கலந்தாய்வில் சேர்ந்தவர்களுக்கு, புதிய இடங்களுக்கு மாற வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X