பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை விசர்ஜனம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோவை : கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா, ஊர்வலங்கள் எதுவுமில்லாமலே, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜைகள் நடத்தினர். ஈச்சனாரி, புலியகுளம் பெரிய விநாயகர் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்ததால், வாசலிலேயே பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளை கரைக்க கோவை மாவட்டத்தில், 48 நீர்நிலைகளில் அனுமதி

கோவை : கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா, ஊர்வலங்கள் எதுவுமில்லாமலே, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜைகள் நடத்தினர். ஈச்சனாரி, புலியகுளம் பெரிய விநாயகர் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்ததால், வாசலிலேயே பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளை கரைக்க கோவை மாவட்டத்தில், 48 நீர்நிலைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி நின்று, கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கரைகள் துாய்மை செய்யப்பட்டு, கிருமி நாசினி பொடி துாவப்பட்டது.

அனைத்து குளங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேரம் அங்கு யாரும் நிற்க அனுமதிக்கவில்லை.மாவட்டத்தில், 45 நீர் நிலைகளில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை வரை, 798 சிலைகள் கரைக்கப்பட்டன. மாநகரில், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், சிங்காநல்லுார் குளம் ஆகியவற்றில், 350 சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்று மாலை வரை மொத்தம், 1,148 சிலைகள் கரைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X