பொது செய்தி

தமிழ்நாடு

அன்புள்ள தமிழக முதல்வருக்கு... மாநகராட்சி ஊழியர்கள் கடிதம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சியில், இளநிலை உதவியாளர்கள் நியமித்ததால், சீனியாரிட்டியில் காத்திருப்போருக்கு பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபை தேர்தலுக்கு முன், கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி, 60 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கோவை : கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சியில், இளநிலை உதவியாளர்கள் நியமித்ததால், சீனியாரிட்டியில் காத்திருப்போருக்கு பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபை தேர்தலுக்கு முன், கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி, 60 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இரவில் 'அப்பாயின்ட்மென்ட்' ஆர்டர் அச்சடிக்கப்பட்டு, மறுநாள் காலை வழங்கப்பட்டது. அன்றைய தினமே, பணிப்பதிவேடு துவக்க உத்தரவிடப்பட்டது.சீனியாரிட்டியில் காத்திருப்போருக்கும், வாரிசு அடிப்படையில் பணிக்குச் சேர்ந்தவர்களில் உயர் கல்வி கற்றவர்கள் பலரும், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்காததால், அதிருப்தி ஏற்பட்டது. இந்நியமனத்தில் விதிமீறல், முறைகேடு நடந்திருக்கிறதா என, பழைய கோப்புகளை, மாநகராட்சி துணை கமிஷனர் விமல்ராஜ் ஆய்வு செய்கிறார்.இச்சூழலில், நேரடி நியமன முறையில் புதிதாக நியமிக்கப்பட்ட, 60 இளநிலை உதவியாளர்களால், சீனியாரிட்டியில் காத்திருக்கும் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்காத சூழல் ஏற்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு, மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மனு அனுப்பியிருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X