பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்வலத்துக்கு தடை; சிலைகள் கரைப்பு!

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கப்படவில்லை.இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில், ஹிந்து அமைப்புகள் சார்பில் வழக்கமாக சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொது இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும், கோவில்களிலும் சிலைகளை

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில், ஹிந்து அமைப்புகள் சார்பில் வழக்கமாக சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொது இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும், கோவில்களிலும் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.ஹிந்து முன்னணி சார்பில் தாராபுரம் ரோடு மாவட்ட தலைமை அலுவலகம் பகுதியில் பந்தல் அமைத்து 108 விநாயகர் சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. முன்னதாக கணபதி ேஹாமம் நடந்தது.

மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிேஷார்குமார், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் 2500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெற்றது.அதே போல் பா.ஜ., நிர்வாகிகள், ஹிந்து அமைப்பு நிர்வாகிகளும் தங்கள் வீடு மற்றும் அலுவலக வளாகங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

சிலைகள் கரைப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் சிலைகள் அனைத்தும் நேற்றே நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைக்கப்பட்டன.நீர் நிலைகளுக்குச் செல்ல முடியாத பக்தர்கள் அருகேயுள்ள கோவில்களில் சிலைகளைக் கொண்டு சென்று வைத்துச் சென்றனர்.

ஹிந்து முன்னணி சார்பில் 2,500 சிலைகள்; பாரத் சேனா, யுவ சேனா, அனுமன் சேனா, ஹிந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள், நேற்று மாலை பகுதி வாரியாக கொண்டு சென்று கரைக்கப்பட்டன. சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் குளங்களிலும், சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றிலும் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.பெருமாநல்லுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், கூலி பாளையத்தில் உள்ள நஞ்சராயன் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X