தமிழ்நாடு

குணாநிதியே, குருவே சரணம்... குறைகள் களைய இதுவே தருணம்! விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், விநாயகர் சதுர்த்தி விழாவை, பொதுமக்கள், பக்திப்பெருக்குடன் கொண்டாடினர். வீடுகளில், சிலை வைத்து வணங்கி, வழிபட்டனர். கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.திருப்பூர் மாவட்டத்தில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா, உற்சாகத்துடனும், பக்திப்பெருக்குடனும் கொண்டாடப்பட்டது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் கொண்டாட, தமிழக அரசு
 குணாநிதியே, குருவே சரணம்... குறைகள் களைய இதுவே தருணம்! விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

திருப்பூர் : திருப்பூரில், விநாயகர் சதுர்த்தி விழாவை, பொதுமக்கள், பக்திப்பெருக்குடன் கொண்டாடினர். வீடுகளில், சிலை வைத்து வணங்கி, வழிபட்டனர். கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருப்பூர் மாவட்டத்தில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா, உற்சாகத்துடனும், பக்திப்பெருக்குடனும் கொண்டாடப்பட்டது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் கொண்டாட, தமிழக அரசு தடை விதித்திருந்தது. வீடுகளில், விநாயகர் சிலைகளை அலங்கரித்து, சிலைக்கு, அவல், பொரி, கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், பழவகைகள் படைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.திருப்பூரில் பல்வேறு இடங்களில், பொது இடங்களுக்கு பதிலாக, வீடு மற்றும் கோவில் வளாகங்களில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

தாசில்தார், துணை தாசில்தார், நில வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மாலை வரை, தொடர்ந்து, கண்காணிப்பு பணியில் இருந்தனர். தடையை மீறி சிலை வைக்க, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் பகுதிகளில், பொது இடங்களில் பந்தல் அமைத்த போது, நேரில் சென்று தடுத்தனர்.

கோவில்களில்சிறப்பு பூஜை

வீடுகள் மட்டுமல்லாது, விநாயகர் கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களில், மண்ணில் செய்த விநாயகர் சிலைகளை வைத்து, கணபதி ேஹாமத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. விநாயகரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு, அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.திருப்பூர், ராம்நகர் வரசக்தி விநாயகர், லட்சுமி நகர் செல்வ விநாயகர், மேட்டுப்பாளையம் செல்வ விநாயகர், டவுன்ஹால் செல்வ விநாயகர், வெங்கடேஸ்வரா நகர் யோக விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர் நவகிரக ரத்தினவிநாயகர்; அவிநாசிலிங்கம்பாளையம், சுந்தரமூர்த்தி விநாயகர், திருப்பூர் பெருமாள் கோவில் வீதி, குபேரவிநாயகர் கோவில், கொடுவாய் செல்வ விநாயகர் கோவில் உட்பட, அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜையும், கணபதி ேஹாமம் மற்றும் லட்சுமி ேஹாம வழிபாடும் நடந்தது.

 திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரவுண்டானா அருகே உள்ள, பெரியவிநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், யாகசாலை பூஜைகளும், கும்பாபிேஷகமும் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X