இ.எஸ்.ஐ., மருத்துவமனை இல்லாததால் சிரமம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருத்துவமனை இல்லாததால் சிரமம்

Added : செப் 11, 2021
Share
திருப்பூர் : திருப்பூரில் 200 படுக்கை வசதிகளுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு, பிரதமர் மோடி, கடந்த 2019 ல் அடிக்கல் நாட்டினார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும், மருத்துவமனை கட்டப்படவில்லை.லகு உத்யோக் பாரதி திருப்பூர் மாவட்ட தலைவர் ரஞ்சித், தேசிய இ.எஸ்.ஐ., வாரிய உறுப்பினரும், லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளருமான சுனில் சுசிகருக்கு அனுப்பியுள்ள

திருப்பூர் : திருப்பூரில் 200 படுக்கை வசதிகளுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு, பிரதமர் மோடி, கடந்த 2019 ல் அடிக்கல் நாட்டினார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும், மருத்துவமனை கட்டப்படவில்லை.லகு உத்யோக் பாரதி திருப்பூர் மாவட்ட தலைவர் ரஞ்சித், தேசிய இ.எஸ்.ஐ., வாரிய உறுப்பினரும், லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளருமான சுனில் சுசிகருக்கு அனுப்பியுள்ள கடிதம்:திருப்பூர். 8600 நிறுவனங்கள், மூன்று லட்சம் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ., காப்பீட்டில் பயனாளியாக இணைத்துள்ளன.

இ.எஸ்.ஐ., மருத்துவமனை இல்லாததால், தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும், மருத்துவ தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். தொற்றுக்கு சிகிச்சை பெறுவதில், தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். திருப்பூரில், உடனடியாக இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இ.எஸ்.ஐ., வாரிய கூட்டத்தில், இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X