பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களுக்கு வழி இல்லை; 'திணறியது' புஷ்பா பஸ் ஸ்டாப்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில், புஷ்பா சந்திப்பு பகுதியிலிருந்து பி.என்., ரோட்டில் ரோட்டோரம் மழை நீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில், அவிநாசி ரோடு-பி.என்., ரோடு சந்திப்பு பகுதியில் வடிகால் கட்டும் பணி துவங்கப்படாமல், கழிவு நீர் ரோட்டில் தேங்கி அவதி ஏற்பட்டு

திருப்பூர் : திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில், புஷ்பா சந்திப்பு பகுதியிலிருந்து பி.என்., ரோட்டில் ரோட்டோரம் மழை நீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், அவிநாசி ரோடு-பி.என்., ரோடு சந்திப்பு பகுதியில் வடிகால் கட்டும் பணி துவங்கப்படாமல், கழிவு நீர் ரோட்டில் தேங்கி அவதி ஏற்பட்டு வந்தது.அப்பகுதியில் கால்வாய் கட்டும் பணி துவங்கும் வகையில், குழி தோண்டும் பணி, புஷ்பா பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்டது.இதற்காக குழி தோண்டிய போது சேகரமான மண் அதே பகுதியில் கொட்டப்பட்டது. முக்கிய ரோடு சந்திப்பு பகுதியில் குழி தோண்டியதால் வளைவில் வாகனங்கள் சென்று திரும்ப முடியவில்லை.

நேற்று காலை அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதி ஏற்பட்டது. நான்கு சக்கர வாகனம் ஒன்று மட்டுமே கடந்து செல்லும் அளவில் பாதை இருந்தது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் வாகனங்கள் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.போலீசார், ரோட்டோரம் குவித்திருந்த மண்ணை மண்வெட்டி மூலம் அகற்றினர்.பின், அப்பகுதியில் பேரி கார்டு அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.போலீஸ் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்காமல் குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் மாற்று ஏற்பாடு செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீசாருக்கு பெரும் அவதி ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X